கேஎல் சென்ட்ரல்
கட்டடம், ரஷ்யா தூதரகம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை போலீஸ்
படை உறுதிபடுத்தியது.
நேற்றிரவு
7.30 மணியளவில் டுவிட்டர் வாயிலாக இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து
சோதனை நடவடிக்கையில் இறங்கிய போலீசார், அங்கு வெடிபொருட்கள் ஏதும் இல்லை என போலீஸ்
உறுதிப்படுத்தியது.
இதனிடையே,
புக்கிட் டாமன்சாரா உள்ள ஒரு வீட்டின் வளாகத்தில் ‘ஐஇடி’ மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனம் கண்டெடுக்கப்பட்டது
என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோஶ்ரீ மஸ்லான் லஸிம் தெரிவித்தார்.
மாலை
5.00 மணியளவில் பொதுமக்கள் அதை கண்ட நிலையில் இரவு 10.00 மணியளவில் போலீசாருக்கு தகவல்
கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த
போலீஸ் வெடிகுண்டு அகற்றும் பிரிவினர் அது முழுமை பெறாத வெடிகுண்டு சாதனம் என்பதை உறுதிப்படுத்தினர்.
No comments:
Post a Comment