10 நாட்களுக்கு முன்னர் காணாமல்
போன அயர்லாந்து நாட்டு சிறுமியின் பசி, மன அழுத்தத்தின் பாதிப்புகளினால் இறந்துள்ளார்.
அவரின் மரணத்திற்கு கற்பழிப்பு உட்பட எவ்வித குற்ற முகாந்திரமும் இல்லை என்று நெகிரி
செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் முகமட் மாட் யுசோரி தெரிவித்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்னர்
இங்குள்ள ரிசோர்ட் ஒன்றிலிருந்து காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமியை தேடும் பணி முடக்கி
விடப்பட்டது. இறுதியில் அச்சிறூமியின் சடலம் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற சவபரிசோதனை
முடிவில், பசி, மன அழுத்தத்தின் காரணமாக குடல் வெடித்தி சிறுமி நோரா இறந்துள்ளார் என
உறுதி செய்யப்படுவதாக அவர் சொன்னார்.
சிறுமி கற்பழிக்கப்படவில்லை
என்பது உறுதி செய்யப்படுவதால் அவர் கடத்தல் நடவடிக்கைக்கு ஆட்படவில்லை என்று அவர் மேலும்
சொன்னார்.
No comments:
Post a Comment