காணாமல் போனதாக கூறப்பட்ட அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சிறுமியின் உடலை தேடுதல், மீட்புக் குழுவினர் மீட்டனர்.
பிற்பகல் 1.57 மணியளவில்
நீலாய், டுசுன் ரிசோர்ட்டிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு
சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் முகமட் மாட் யூசோப் தெரிவித்தார்.
கடந்த 4ஆம் தேதி காணாமல்
போன சிறுமி நோரா அன்னே குய்ரினை தேடும் முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
மீட்கப்பட்ட சடலம் சவப்பரிசோதனைக்காக
துவாங்கு ஜபார் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.
No comments:
Post a Comment