Saturday, 3 August 2019

5ஆவது மாடியிலிருந்து மின்தூக்கி விழுந்ததில் 4 பேருக்கு கால் முறிவு

கோலாலம்பூர்-
5ஆவது மாடியிலிருந்து கீழ்தளத்திற்கு மின்தூக்கி (லிஃப்ட்) ஒன்று விழுந்து நொறுங்கியதில் 4 பேருக்கு கால் முறிந்தது.
இச்சம்பவம் இங்கு பந்தாய், கம்போங் கெரிஞ்செயில் இன்று பிற்பகல் 2.36 மணியளவில் நிகழ்ந்தது.i

5ஆவது மாடியில் பழுதடைந்த மின்தூக்கியில் 8 பேர் சிக்கிக் கொண்ட நிலையில் சிறுவன் உட்பட 4 பேருக்கு கால் முறிந்ததோடு இதர நால்வர் சிறு காயங்களுக்கு இலக்காகினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த 18 தீயணைப்பு வீரர்கள் மின்தூக்கியில் சிக்கிக் கொண்டவர்களை மீட்டு மலாயா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.



No comments:

Post a Comment