‘2020 மலேசியாவுக்கு
வருகை தாருங்கள்’
(Visit Malaysia 2020) திட்டத்திற்கான புதிய
முத்திரையை பிரதமர் துன் மகாதீர் அறிமுகம் செய்து வைத்தார்.
மலேசிய சுற்றுலா துறை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த தேசிய முன்னணி ஆட்சியில் இத்திட்டத்திற்கு அறிமுகம் செய்யப்பட்ட முத்திரைக்கு
பதிலாக புதிய முத்திரையை பிரதமர் அறிமுகம் செய்தார்.
தேசிய பிரச்சாரமான இதை அனைவருக்கும் நினைவூட்டும் வகையில்
புதிய முத்திரையை உருவாக்க சுற்றுலா அமைச்சு அனைத்து மலேசியர்களுக்கும் அழைப்பு விடுத்தது.
மார்ச் 11 முதல் மர்ச் 24 வரை நடத்தப்பட்ட முத்திரை உருவாக்கும் போட்டியில்
586 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. அதில் அல்ப்ரெட் புவா ஹோக் புங் (வயது 23) உருவாக்கிய
முத்திரை தேர்வு செய்யப்பட்டது.
இந்த முத்திரை அறிமுக நிகழ்வின்போது சுற்றுலா அமைச்சர் டத்தோ முஹமடின் கெதாபியும் உடனிருந்தார்.
No comments:
Post a Comment