கடந்த சனிக்கிழமை தலைநகருக்கு கல்வி சுற்றுலா மேற்கொண்டிருந்த தஞ்சோங் மாலிம் டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த முதலாம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மக்கள் பொதுநல செயல் கட்சியினர் சத்துணவு, கையடக்க திருக்குறள் புத்தகம், தமிழ் நாளிதழ்கள் ஆகியவற்றை வழங்கு ஊக்கப்படுத்தினர்.
உலக நெறியான திருக்குறளை
மாணவர்கள் தெரிந்து வைத்துக் கொள்வதன் மூலம்
வாழ்வில் சிறந்த நிலையை அடைய முடியும் என்று மக்கள் பொதுநல செயல் கட்சியின் தலைவர்
வி.எம்.கோபி தெரிவித்தார்.
அதோடு நாட்டு நடப்புகளையும்
உலக நிலவரங்களையும் தெரிந்து கொள்ள தினசரி நாளிதழ்களை படிக்க வேண்டும். அப்போதுதான் பொதுநிலை தகவல்களை தெரிந்து வைத்துக்
கொள்ள முடியும் என்ற அவர், தமிழ்நாட்டு முதல்வராக
எம்ஜிஆர் இருந்தபோது சத்துணவுத் திட்டத்தை தொடங்கினார். அது இன்றளவும் நடப்பில் அமல்படுத்தப்பட்டு
வருகிறது என்று கூறினார்.
பெட்டாலிங் ஜெயா, லோட்டஸ்
உணவகத்தில் இந்த மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களிடையே வாசிக்கும்
பழக்கம் மேம்பட தமிழ் நாளிதழ்கள் வழங்கப்பட்டன.
கல்வி சுற்றுலாவில் கலந்து
கொண்ட மாணவர்களுக்கு சத்துணவை வழங்கி பேருதவி புரிந்த மலேசிய பொதுநல செயல் கட்சி, மக்கள் எம்ஜிஆர் பொதுநல மன்றத்திற்கு பள்ளி துணை
தலைமையாசிரியர் எடிசன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் மக்கள் பொதுநல
கட்சியில் தலைமைச் செயலாளர் எஸ்.ஏ.மின்மினி, முன்னணி தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment