4ஆம் படிவ இடைநிலைப்பள்ளி
மாணவன் கொலையுண்ட சம்பவம் தொடர்பில் ஒரு பெண் உட்பட மூவர் 6 நாட்களுக்கு (ஜூலை 10 தொடங்கி) தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம்
உத்தரவிட்டது.
15,16 வயதுடைய அம்மூவரும்
நேற்றுக் காலை தைப்பிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அம்மாணவனின் கொலை சம்பவம்
தொடர்பில் அவனது சகோதரி, சகோதரியின் காதலன்
ஆகியோர் கைது செய்யப்பட்டு 6 நாட்கள் தடுப்பு காவலில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தாமான்
கிளென்வியூ குடியிருப்புப் பகுதியின் காலி வீட்டில் பிளாஸ்டிக் சுற்றப்பட்ட நிலையில்
அம்மாணவனின் சடலம் மீட்கப்பட்டது.
காதலியின் வீட்டில் விடப்பட்ட
கைப்பேசியை மீண்டும் எடுப்பதற்காக சென்றபோது சகோதரனுக்கும் காதலனுக்கும் இடையே ஏற்பட்ட
கைகலப்பில் இக்கொலை நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment