Thursday, 11 July 2019

பாலியல் குற்றச்சாட்டு; பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் கைது- போலீஸ்

ஈப்போ-

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் பேரா  மாநில ஆட்சிக்குழு உறுப்பினரை விசாரணைக்கு உதவும் பொருட்டு போலீஸ் கைது செய்துள்ளது.
வீட்டில் பணி புரியும் இந்தோனேசிய பெண்மணியிடம் சம்பந்தப்பட்ட ஆடவர் பாலியல் வல்லுறவு புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் நேர்மையான விசாரணை மேற்கொள்ளும் வகையில் இந்த கைது நடவடிக்கை அமைந்திருப்பதாக பேரா போலீஸ் தலைவர் ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர் தன்னை கற்பழித்ததாக வீட்டுப் பணிப்பெண் கடந்த திங்கட்கிழமை ஜெலாப்பாங் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில்  நாளை நடைபெறவிருந்த ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியேற்பு விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பேரா மந்திரி பெசார் அலுவலகம் தெரிவித்தது.

No comments:

Post a Comment