ரவாங்-
இனி ஆண்டுதோறும் நடத்தப்படும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான செந்தமிழ் விழாவை இனி மாநில அரசே ஏற்று நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளிகளில்
தமிழ்மொழி சார்ந்த நிகழ்வுகள் இயல்பாகவே நடத்தப்படும். ஆனால் இடைநிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு
தமிழ்மொழி சார்ந்த நிகழ்வுகள் நடத்தப்படுவது மிகக் குறைவே ஆகும்.
தங்களுக்காக
ஏற்பாடு செய்யப்படும் மொழி சார்ந்த நிகழ்வுகளில் மாணவர்கள் பங்குக் கொண்டு அதற்கான
தளங்களை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தாமான் டேசா-2 கன்ட்ரி
ஹோம்ஸ் இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான செந்தமிழ் விழாவின் நிறைவு விழாவில்
உரையாற்றியபோது கணபதிராவ் வலியுறுத்தினார்.
இவ்வாண்டு
செந்தமிழ் விழா சிறப்புற நடத்தேறுவதற்கு மாநில அரசின் மானியம் கிடைப்பதற்கு உதவியதாக
கூறிய அவர், இவ்விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த விழா ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சுந்தரமூர்த்தி
தலைமையிலான குழுவினரையும் கணபதிராவ் வெகுவாக பாராட்டினார்.
200க்கும்
மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்ட இவ்விழாவின் ஒட்டுமொத்த வெற்றியாளராக
கிள்ளான் மாவட்டம் சுழற்கிண்ணத்தை தட்டிச் சென்றது.
No comments:
Post a Comment