அண்மையில் தாய்லாந்தில் ஆசியான் கராத்தே மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கராத்தே போட்டியில் ஸ்தாப்பாக், தாமான் மெலாத்தியைச் சேர்ந்த சஞ்சீவ் ராஜ் (வயது 13) வெள்ளி பதக்கத்தை வென்றார்.
14 வயதுக்கு கீழ்ப்பட்டோருக்கான
பிரிவில் பங்குக் கொண்ட சஞ்சீவ் ராஜ் வெள்ளி பதக்கம் வென்றுள்ளதோடு இதற்கு முன்னர்
பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று பதக்கங்களை வென்றுள்ளார்.
இதற்கு முன்னர் தித்திவங்சா
அரங்கத்தில் நடைபெற்ற மைலோ அனைத்துலக
போட்டியிலும்
பங்குக் கொண்டு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
ராஜசேகரன் – திருமதி யுவராணி
தம்பதியரின் மூத்த மகனான சிஞ்சீவ் ராஜ் கராத்தே போட்டியில் மட்டுமல்லாது கல்வியிலும்
சிறந்த நிலையை அடைந்துள்ளார். தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சஞ்சீவ்
ராஜ், யூபிஎஸ்ஆர் தேர்வில் 8ஏ பெற்றதோடு சிலாங்கூர் மாநில அரசின் விருதை வென்றுள்ளார்.
இன்றைய சிறுவர்கள் கல்வியில்
மட்டும் முழு கவனம் செலுத்துவதை விட பிற விளையாட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்பட
வேண்டும். அதுதான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்த வழிகாட்டலாகும் என்று தந்தை
ராஜசேகரன் தெரிவித்தார்.
தாமான் மெலாவாத்ததியில் உள்ள
ஒக்கினாவா கோஜு ரியோ கராத்தே கழகத்தின் வழி மாஸ்டர் மு.மணிவண்ணனிடம் சஞ்சீவ் ராஜ் கராத்தே கலையை பயின்று வருகிறார்.
இவர் மட்டுமல்லாது அவரின் சகோதரர் ஜெய் சுராஜ் (வயது 6), சகோதரி ஜெய் ஷீரா (வயது 9)
கராத்தே கலையை பயின்று வருவதோடு நட்புமுறை ஆட்டத்தில் பதக்கங்களை வென்றுள்ளனர்.
No comments:
Post a Comment