அண்மையில் ஈப்போ, மகிழம்பூ
தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் கழக ஏற்பாட்டில்...இவ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வினை
சந்திக்கவிருக்கும் மாணவர்களுக்காக ‘இலட்சிய பயணம் 2019’ என்ற தலைப்பிலான தன்முனைப்பு
பட்டறை மிகச்சிறப்பாக நடந்தேறியது.
தொடர்ந்து நான்காவது
ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்பட்டறை மாணவர்களுக்கு தேர்ச்சியின் அவசியம், இறுதி நேர
உத்வேகம், சாதனையாளர்களின் கடந்த காலம், விவேகத்துடன் உறுதி மொழி என பல்வேறு பரிமாணங்களுடன்
நடைப்பெற்றது. சுமார் 70 மாணவர்கள் இதில் பங்குபெற்று பயனடைந்தனர். பள்ளியின் ஆசிரியர்
குழுவினர், பெற்றோர்களில் சிலரும் கலந்து கொண்டனர்.
இம்முறை கழகத்தின் செயலாளர்
தமிழரசன் பட்டறையின் நெறியாளராக வழிநடத்தினார். ஆசிரியர் கல்லூரியில் விரிவுரையாளராக
பொறுப்பிலிருக்கும் டாக்டர் மணிராஜ் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார்.
மேலும் தனியார் நிறுவனமொன்றில்
உயரிய பொறுப்பிலிருக்கும் இப்பள்ளியின் முன்னாள் மாணவி குமாரி ரோஸ் ஹெலன், வீடமைப்பு
விநியோகத் துறையில் முன்னேறி வரும் கழகத்தின் தலைவர் அருண், சொந்த தொழிலில் வளர்ச்சி
கண்டுள்ள கழகத்தின் ஆலோசகர் கலைசேகர் ஆகியோர் பேச்சாளர்களாக செயலாற்றினர்.
நம் பள்ளி....நமது கடமை என்ற
உணர்வில் நடத்தப்படும் இந்த தன்முனைப்புப் பட்டறை மிகச் சிறந்த முயற்சியென்று பள்ளியின்
தலைமையாசிரியை திருமதி மாரியம்மாள் புகழ்ந்தார.
இந்த நிகழ்வு நிச்சயமாக வரும்
காலங்களிலும் தொடரும் என இப்பள்ளியில் பயின்று தற்போது இதே பள்ளியில் துணை தலைமையாசிரியையாக
பணி புரியும் திருமத தங்கம் உறுதியளித்தார்
No comments:
Post a Comment