Thursday 1 August 2019

ஐஜிபியை சந்திக்க விரும்புகிறேன் – திருமதி இந்திரா காந்தி

கோலாலம்பூர்-

தனது மகள் பிரசன்னா டிக்‌ஷா விவகாரம் தொடர்பில்  தேசிய போலீஸ் படைத் தலைவர் அப்துல் ஹமிட் படோரை சந்திக்க விரும்புவதாக திருமதி இந்திரா காந்தி தெரிவித்துள்ளார்.
தனது முன்னாள் கணவரால் மதமாற்றம் செய்து தூக்கிக் கொண்டுச் செல்லப்பட்ட பிரசன்னா டிக்‌ஷாவை பிரிந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆனால் அவர்கள் இருக்கும் இடம் குறித்த எந்தவொரு தகவலையும் தாம் போலீசாரிடமிருந்து இதுவரை பெற்றதில்லை.
தனது மகளையும் முன்னாள் கணவரையும் கண்டறியும் பொருட்டு போலீஸ் படை தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும் என ஐஜிபி கூறியுள்ளதை அடுத்து, அவர்களின் விசாரணைக்கு உதவும் பொருட்டு ஐஜிபியை சந்திக்க விரும்புவதாக முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியையுமான திருமதி இந்திரா காந்தி குறிப்பிட்டார்.
மத மாற்றம் செய்துக் கொண்ட  முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் (பத்மநாபன்) 11 மாதக் குழந்தையாக இருந்தபோது  பிரசன்னா டிக்‌ஷாவை உடன் அழைத்துச் சென்றார். இன்றுவரை அவர் எங்கிருக்கிறார் என போலீஸ் தேடுதல் வேட்டையை முன்னெடுத்து வருகிறது.

No comments:

Post a Comment