Friday, 5 July 2019

‘மித்ரா’வுக்கு எதிராக கீழறுப்பு வேலைகள்- குமுறும் வேதமூர்த்தி

கோலாலம்பூர்-

‘மித்ரா’ மீதும் தம்முடைய அமைச்சின் மீதும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் தமிழ் நாளிதழ் ஒன்று இந்திய சமுதாயத்திற்கான ஆக்கப்பூர்வப் பணியை செய்யவிடாமல் தொடர்ந்து கீழறுப்பு வேலையை செய்து வருவதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி குற்றஞ்சாட்டினார்.
கடந்த காலத்தை போல் இல்லாமல் முற்போக்குச் சிந்தனையுடன் மிக மிக நிதானமாக திட்டமிட்டு நான்காவது தொழில் புரட்சிக்கு ஏற்ப மலேசிய இந்திய இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்களுக்கு உள்நாட்டு அளவிலும் பன்னாட்டு அளவிலும் வர்த்தக வாய்ப்பை ஏற்படுத்தவும் இளம் தொழில் முனைவர்களை உருவாக்கவும் முயற்சிகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதற்கெல்லாம் குந்தகம் ஏற்படுத்தும் விதமாக சம்பந்தப்பட்ட நாளிதழ் செய்திகளை வெளியிட்டு  நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் மீது இந்திய சமுதாயத்திற்கு வெறுப்பு ஏற்படும் அளவிற்கு செயல்படுகிறது. இது ஓர் அப்பட்டமான கீழறுப்பு வேலை என்று வேதமூர்த்தி தம்முடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment