பெண் சட்டமன்ற உறுப்பினருடம்
தான் கள்ள உறவில் இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பொய்யானது என்று சிலாங்கூர் மாநில மந்திரி
பெசார் அமிருடின் சாரி தெரிவித்தார்.
சண்டாக்கானில் மே 11இல் தாமும்
சட்டமன்ற பெண் உறுப்பினரும் ஹோட்டலில் தனியாக இருந்ததாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.
குறிப்பிடப்பட்ட நாளில் தான்
சண்டக்கானில் இல்லை, கோலாலம்பூரில் இருந்ததாக கூறிய அவர், தன்னை அரசியலில் இருந்து
ஒழிக்கவே இந்த பொய்யான தகவல் பகிரப்பட்டு வருகிறது.
இவ்விவகாரம் தொடர்பில் சட்ட
நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிக்கப் போவதாக அமிருடின் சாரி குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment