சர்ச்சைக்குரிய
சமய போதகர் ஸாகீர் நாய்க் இண்டர்போலின் சிவப்பு பட்டியிலில் இடம்பெறவில்லை என்று
உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.
இண்டர்போலின்
சிவப்பு அறிக்கையை அமைச்சு ஆய்வு செய்தபோது அதில் ஸாகீர் நாய்க்கின் பெயர்
இடம்பெறவில்லை. அதேபோன்று ஐநா பாதுகாப்பு மன்றத்தின் தீவிரவாத பட்டியலிலும் ஸாகீர்
நாய்க் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை.
ஸாகீர்
நாய்க்கை நாடு கடத்தும் இந்தியாவின் கோரிக்கையில் மலேசியாவின் நிலைப்பாடு என்ன?
என்று பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹின் துவான் மான் (குபாங் கிரியான்)
மக்களவையில் எழுப்பியிருந்த கேள்விக்கு டான்ஶ்ரீ முஹிடின் யாசின் இவ்வாறு
பதிலளித்தார்.
No comments:
Post a Comment