16 வயது இடைநிலைப்பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள அம்மாணவனின் 14 வயது சகோதரி, அவளின் காதலன் ஆகியோரை 6 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கு
தாமான் கிளென்வியூ குடியுருப்புப் பகுதியில் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில்
ஆடவனின் சடலத்தை பொதுமக்கள் கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
ஜூலை 5ஆம் தேதி காணாமல் போனதாக
புகார் செய்யப்பட்ட இளைஞனின் உடல்தான் அது என சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் உறுதிப்படுத்திய
நிலையில், அவ்வாடவனின் மரணத்தில் தொடர்புடையவர்கள்
என்ற சந்தேகத்தின் பேரில் சகோதரியும் 15 வயதுடைய அவளது காதலனையும் போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே நேற்று நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்ட அவ்விருவரிடம் விசாரணை மேற்கொள்ளும் வகையில் வரும் சனிக்கிழமை தடுப்புக்
காவலில் வைக்க தைப்பிங் மாஜிஸ்திரேன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment