இளையோருக்கான
வயது வரம்பு 40இலிருந்து 30ஆக குறைக்கும் வகையிலான திருத்தம் செய்யப்பட்ட 2019 இளையோர்
மன்றம், இளையோர் மேம்பாட்டு சட்ட (668 சட்டம்) மசோதாவை மக்களவை அங்கீகரித்துள்ளது.
ஐந்து மணி
நேரம் நடைபெற்ற சட்ட மசோதா திருத்தம் மீதான விவாதத்திற்கு பின்னர் இச்சட்டம் அங்கீகரிக்கப்பட்டது.
இந்த சட்ட
மசோதா திருத்தம் செய்யப்பட்டதன் மூலம் இளையோர் மன்றம் சார்ந்த அமைப்புகளில் 18 வயதுக்கு
குறையாத 30 வயதுக்கு மேற்போகாதவர்கள் மட்டுமே பதவி வகிக்க முடியும்.
இந்த சட்ட
மசோதாவை இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் சைட் சித்திக் சைட் அப்துல் ரஹ்மான் மக்களவையில்
தாக்கல் செய்தார்.
No comments:
Post a Comment