Wednesday, 10 July 2019

18 வயதில் வாக்களிக்கும் உரிமை; ந.கூட்டணி தலைமைத்துவம் மன்றம் அங்கீகாரம்

புத்ராஜெயா-

18 வயது நிரம்பிய இளையோருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்குவதற்கு பக்காத்தான் ஹராப்பான் (நம்பிக்கைக் கூட்டணி) தலைமைத்துவ மன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

18 வயது நிரம்பியவுடன் இயல்பாகவே அவர்கள் வாக்காளர்களாக பதிவு பெறுவதற்கு இந்த ஒப்புதல் வழிவகை செய்கிறது என்று அவர் சொன்னார்.

இது குறித்து பேசிய இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான், இவ்விவகாரம் மக்களவையில் சிறந்த முறையில் தீர்வு காணப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதன் மூலம் 18 வயதில் வாக்களிக்கும் உரிமை, இயல்பாகவே வாக்காளராக பதிவு செய்வது (18 வயது நிரம்பியவுடன்), வேட்பாளர் வயது வரம்பு 18ஆக குறைப்பது போன்ற மூன்று பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ள இந்த ஒப்புதல் வழிவகுக்கும் என்று அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment