பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் இந்திய ஆடவரின் சடலம் ஒன்று தாமான் கிரின்வியூ குடியிருப்புப் பகுதியின் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்டது.
16 வயது மதிக்கத்தக்க அவ்விளைஞன்
காணாமல் போனதாக கடந்த வெள்ளிக்கிழமை சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் போலீஸ் புகார் செய்திருந்த
நிலையில் இன்று நண்பகல் 12.20 மணியளவில் அவ்வாடவனின் சடலம் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டதாக
தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஒஸ்மான் மாமாட் தெரிவித்தார்.
இச்சம்பவன் தொடர்பில் முதற்கட்ட
விசாரணையை தொடங்கிய போலீசார், மரணமடைந்த இளைஞரின் 14 வயது சகோதரியையும் அவரின் காதலனையும்
கைது செய்துள்ளனர்.
அவ்விளைஞனை கொலை செய்ததை
இருவரும் ஒப்புக் கொண்டதாகவும் கொலைக்கான காரணம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும்
அவர் மேலும் சொன்னார்.
No comments:
Post a Comment