அண்மையில் மெட்ரிக்குலேஷன் விவகாரம் இந்திய சமுதாயத்தில்
விஸ்வரூபம் எடுத்த போதிலும் தற்போது இந்திய மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில்
எண்ணிக்கை சமுதாயத்தின் மத்தியில் அதிருப்தி அலையை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது.
இவ்வாண்டு மெட்ரிக்குலேஷன் இடங்களில் 1,212 இந்திய மாணவர்களுக்கு
மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை செனட்டர் டத்தோ டி.மோகன் வெளியிட்டுள்ளார்.
நேற்றைய மேலவை கூட்டத் தொடரில் மெட்ரிக்குலேஷன் விவகாரம்
தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு 1,212 இந்திய மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது
என காணொளி ஒன்றில் தெரிவித்துள்ளர்.
முந்தைய தேசிய முன்னணி ஆட்சியின்போது 2,200 இடங்கள் வரை
இந்திய மாணவர்களுக்காக ஒதுகீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 1,212 இடங்கள் மட்டுமே
ஒதுக்கீடு என்பதை சமுதாயத்திற்கு பெருத்த ஏமாற்றமாகும்.
அதுவும் தற்போதைய அரசாங்கத்தில் இந்திய சமுதாயத்தின் சார்பில்
4 முழு அமைச்சர்கள், 1 துணை அமைச்சர் இருந்தும் மெட்ரிக்குலேஷன் இடங்கள் ஒதுக்கீட்டில்
பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
மெட்ரிக்குலேஷன் இட ஒதுக்கிடு இந்திய சமுதாயத்தின் மத்தியில்
பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் 25,000 இடங்களை 40,000ஆக உயர்த்திய பக்காத்தான்
ஹராப்பான் அரசாங்கம் அதில் 10 விழுக்காடு (4,000 இடங்கள்) பூமிபுத்ரா அல்லாதோருக்கு ஒதுக்கப்படும் என்று அறிவித்தது.
No comments:
Post a Comment