தோட்டத் துறைகளுக்கு ஆப்பிரிக்கர்களை
இறக்குமதி செய்யும் பரிந்துரை இனி தொடரப்படாது என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன்
தெரிவித்தார்.
கடந்த ஜூன் 28இல் தோட்ட உரிமையாளர்களுடன்
நடத்தப்பட்ட சந்திப்பின்போது எடுக்கப்பட்ட முடிவு தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
தோட்டத் துறைகளில் ஏற்பட்டுள்ள
தொழிலாளர் பற்றாக்குறையினால் பெரும்பாலான
உரிமையாளர்கள் நட்டத்தை சந்தித்துள்ளனர்.
செம்பனை பழங்கள் காய்த்த
21 நாட்களுக்குள் அவற்றை அறுவடை செய்யவில்லையென்றால் அவை பயன்படுத்த முடியாத நிலைக்கு
போய்விடும்.
தொழிலாளர் பற்றாக்குறையினால்
தோட்டத் தொழில் துறை ஆண்டுக்கு 10 பில்லியன் வெள்ளி இழப்பை சந்தித்துள்ளது.
அதனை நிவர்த்தி செய்யும்
பொருட்டே எண்ணெய், எரிவாயு துறைகளில் உள்ளது போலவே தோட்டத் துறைகளிலும் ஆப்பிரிக்கர்களை
களமிறக்க பரிந்துரை செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
No comments:
Post a Comment