Tuesday, 2 July 2019

அம்னோ தலைவர் பதவிக்கு மீண்டும் திரும்பினார் ஸாயிட்

பாகான் டத்தோ-

விடுமுறையில் சென்றிருந்த டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி அம்னோ தலைவர் பதவிக்கு மீண்டும் திரும்பினார்.
பாகான் டத்தோவில் நடைபெற்ற ஹரிராயா விருந்துபசரிப்பில் உரையாற்றிய டத்தோஶ்ரீ ஸாயிட், கடந்தாண்டு டிசம்பர் மாதம் அம்னோவின் துணைத் தலைவர் முகமட் ஹசானிடம் ஒப்படைத்த பதவிக்கு மீண்டும் திரும்புவதாக கூறினார்.
தன்னுடைய விடுமுறையை முடித்துக் கொண்டு மீண்டும் தாம் பணிக்கு திரும்புவதாக முன்னாள் துணைப் பிரதமருமான டத்தோஶ்ரீ ஸாயிட் கூறினார்.

No comments:

Post a Comment