நாட்டிலுள்ள டோல்களை அகற்றினால் அது அரசாங்கத்திற்கு கடுமையான நிதிச் சுமையை ஏற்படுத்தி விடும் என்று பிரதமர் துன் மகாதீர் குறிப்பிட்டார்.
வடக்கு- தெற்கு நெடுஞ்சாலை
டோல்களை அகற்றினால் அரசாங்கத்திற்கு வெ. 3,000 கோடி செலவாகும். அந்த தொகையை நாட்டின் கடனை அடைக்க பயன்படுத்தலாம்.
அரசாங்கத்தின் நிதிச் சுமையும் இதனால் குறையும்.
டோல் கட்டணங்களை குறைப்பது
தொடர்பில் தனியார் நிறுவனங்களிடம் அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. ஆயினும் இப்போதைக்கு
எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் சொன்னார்.
இரண்டாம் ஆண்டில் காலடி வைத்துள்ள
நடப்பு அரசாங்கம் மக்களை பாதிக்கக்கூடிய பிரச்சினைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்
என்று மூத்த ஆலோசகர் மன்றத்தின் தலைவர் துன் டாய்ம் ஸைனுடின் கூறியிருந்தது தொடர்பில்
மகாதீர் இவ்வாறு கூறினார்.
பக்காத்தான் ஹராப்பான் வழங்கிய
தேர்தல் வாக்குறுதிகளில் டோல் கட்டணம் அகற்றப்படும் என்பதும் உள்ளடங்கும்.
No comments:
Post a Comment