ஏடிஎம்
இயந்திரத்தை கொள்ளையிடும் முயற்சியின்போது சந்தேகத்திற்குரிய இரு கொள்ளையர்கள் வெடிபொருளை
பயன்படுத்தியுள்ளதாக நம்பப்படுகிறது.
இங்கு
விஸ்மா யுனிகேப் வளாகத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை இரவு 8.00 மணியளவில்
கொள்ளையிட இருவர் முயன்றுள்ளனர்.
காரில்
வந்திறங்கிய அவ்விருவரும் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையிடும் வகையில் வெடிபொருளை
பயன்படுத்தியுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று காஜாங் மாவட்ட
போலீஸ் தலைவர் அஹ்மாட் ஸாரிஃப் முகமட் யுசோப் தெரிவித்தார்.
இருமுறை
கொள்ளையிட முயற்சித்தபோதும் அவர்களின் முயற்சி தோல்வியடைந்துள்ளது என குறிப்பிட்ட
அவர், முன்னதாக மாலை 7.53 மணிக்கும் அவர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்
என்றார்.
இது
தொடர்பில் அங்குள்ள சிசிடிவி கேமிரா உதவியுடன் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படுவர்
எனவும் அவர் சொன்னார்.
No comments:
Post a Comment