கோலாலம்பூர்-
மஇகாவின் தலைமைச் செயலாளராக
டத்தோ எஸ்.அசோஜனும் நிர்வாகச் செயலாளராக ஏ.கே.இராமலிங்கமும்
நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மஇகாவின் தேசியத் தலைவர்
டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இவ்விருவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கினார்.
தலைமைச் செயலாளராக பதவி வகித்து
வந்த டத்தோஶ்ரீ எஸ்.வேள்பாரி சொந்த தொழில்களில் தீவிரம் காட்டவிருப்பதால் அப்பதவியிலிருந்து
விலகியதை அடுத்து டத்தோ அசோஜன் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இதற்கு முன்பு
கட்சியின் நிர்வாகச் செயலாளராக அவர் பதவி வகித்து வந்தார்.
டத்தோ அசோஜன் வகித்து வந்த
பதவிக்கு மஇகா மத்திய செயலவை உறுப்பினர் ஏ.கே.இராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment