சர்ச்சைக்குரிய
சமய போதகர் டாக்டர் ஸாகீர் நாய்க்கிற்கு ‘அமைதி டிவி’ (Peace TV) வழிநடத்துவதற்கு நிலமும்
தேசிய தொலைகாட்சி அலைவரிசையில் தனி நேரம் ஒதுக்கப்படுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டதாக
வெளிவந்த செய்தியை பிரதமர் துறை இலாகா மறுத்துள்ளது.
இந்தியாவின்
தொலைகாட்சி ஒன்று வெளியிட்ட இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என ஓர் அறிக்கையில் வழி
பிரதமர் துறை இலாகா கூறியது.
இந்தியாவில்
தடை செய்யப்பட்ட அமைதி டிவியை வழிநடத்த நிலமும் அதற்கான அனுமதியும் மலேசிய அரசாங்கம்
வழங்கியுள்ளதாக இந்தியாவின் தொலைகாட்சி வெளியிட்ட செய்தி சமூக ஊடகங்களில் வைரலானது.
No comments:
Post a Comment