மலாய் மாணவர்கள் எளிதாக
பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கான ‘கொல்லைப்புற கதவே’ மெட்ரிக்குலேஷன் ஆகும் என்று
பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.
எஸ்டிபிஎம் தேர்வை எழுதாத மலாய்க்கார
மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் நுழைய
முடியாது என்பதால் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட எளிமையான முறையே மெட்ரிக்குலேஷன்
ஆகும்.
எஸ்டிபிஎம் தேர்வு கடினமான ஒன்று
என்பதோடு பல்கலைக்கழகங்களில்
நுழைவதற்கு அதில் உத்தரவாதம்
வழங்கப்படுவதில்லை. ஆனால் மெட்ரிக்குலேஷன் பயிலும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக
நுழைவு உறுதி செய்யப்படுகிறது.
எஸ்பிஎம் முடித்த மலாய் மாணவர்கள்
எளிய முறையில் பல்கலைக்கழகம் செல்வதற்காக உருவாக்கப்பட்டதே மெட்ரிக்குலேஷன் ஆகும் என்று அவர் சொன்னார்.
No comments:
Post a Comment