வாக்குறுதி
அளித்தபடி பிரதமர் பதவியை துன் மகாதீர் அன்வாரிடம் ஒப்படைக்காவிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜசெகவின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்தார்.
பதவி ஒப்படைப்பு
சுமூகமாக ஒப்படைக்கப்படும் எனவும் முன்னதாகவே பொதுத் தேர்தல் நடத்தப்படாது எனவும் அம்னோவின்
இடைக்காலத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹசானின் கூற்றுக்கு அவர் பதிலளித்தார்.
இந்த சவாலில் முகமட் ஹசான் வெற்றி பெற்றால் 15ஆவது பொதுத் தேர்தலில்
தாம் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் சொன்னார்.
சண்டக்கான்
இடைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய முகமட் ஹசான்,
வாக்குறுதி அளித்தபடி துன் மகாதீர் பிரதமர் பதவியை டத்தோஶ்ரீ அன்வாரிடம் ஒப்படைக்க
மாட்டார் எனவும் அதற்கு முன்னதாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கு
வழிவிடப்படும் என்று கூறியிருந்தார்.
No comments:
Post a Comment