கோலாலம்பூர்-
மலேசியத் தமிழர்களிடையே சினிமாத்துரை மீதான ஆர்வம் நம்ப முடியாத அளவுக்கு அதிகரித்திருப்பது ஆரோக்கியமான மாறுதல் என்றே கூறலாம். தமிழில் தயாராகும் உள்ளூர் படைப்புகள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் அங்கீகாரங்களையும் பெற்று வருகிறது.
அந்த வகையில் நம் நாட்டிலுள்ள உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கி புதுமையான படைப்புகளை வரவேற்க ஆஸ்ட்ரோ வானவில் டெலிமூவி திட்டம் இவ்வாண்டும் இடம்பெறவுள்ளது.
வரும் மே 17-ஆம் தேதிக்குள் ஆர்வமுள்ள தயாரிப்பு நிறுவனங்கள் ஆஸ்ட்ரோ உலகம் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை நாடி, அங்குள்ள ஆஸ்ட்ரோ வானவில் டெலிமூவி திட்டம் விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பி வைக்க வேண்டும். இத்திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தில் பெற்று கொள்ளலாம்.
அதை வேளையில், திகில், மர்மம் மற்றும் அறிவியல் சார்ந்த கதைகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கதைகள் டெலிமூவியாகத் தயாரிக்கும் வாய்ப்பை ஆஸ்ட்ரோ வானவில் வழங்கவுள்ளது. இந்த டெலிமூவிகள் ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201 மற்றும் ஆஸ்ட்ரோ கோ செயலியில் ஒளிபரப்பப்படும்.
No comments:
Post a Comment