நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது
வழங்கிய வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டாலும் அதனை நிறைவேற்றுவதற்கான
பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் துன் மகாதீர் கூறினார்.
பக்காத்தான் ஹராப்பானின்
தேர்தல் கொள்கை அறிக்கையான BUKU HARAPAN-இல் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் 39 விழுக்காடு
வாக்குறுதிகள் நிறைவேற்றம் கண்டுள்ளன.
ஏற்கெனவே அமலாக்கம் செய்யப்பட்ட
வாக்குறுதிகளும் அமலாக்கத்தில் இருந்து வரும் வாக்குறுதிகளும் இதில் அடங்கும்.
128 முன்னெடுப்பு திட்டங்களில்
53 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதே போன்று 283 முன்னெடுப்பு திட்டங்கள் திட்ட வடிவில் இருக்கின்றன. அவை செயலாக்கம் காண்பதில்
காலதாமதம் ஏற்பட்டாலும் அவை நிறைவேற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்
என்று பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போது
கூறினார்.
No comments:
Post a Comment