முறையான ஆவணங்கள்
இன்றி கோழிகளை விரைவு பேருந்தில் கொண்டுச் சென்ற நான்கு ஆடவர்களுக்கு ஜோகூர்பாரு மாஜிஸ்திரேட்
நீதிமன்றம் தலா ஒருவருக்கு 1,000 வெள்ளி அபராதம் விதித்தது.
கடந்தாண்டு
ஏப்ரல் 7ஆம் தேதி லார்க்கின் சென்ட்ரல் பேருந்து முனையத்தில் பொது தரை போக்குவரத்து
ஆணையத்தைச் சேர்ந்த 3 அதிகாரிகள் ஒரு விரைவு பேருந்தில் சோதனை மேற்கொண்டபோது இந்த நான்கு
ஆடவர்கள் மீதும் புகார் பதவு செய்யப்பட்டது.
உயிருள்ள
கோழிகள் 9 கோழிகளையும் உயிரற்ற 4 கோழிகளையும் விரைவு பேருந்தில் கொண்டுச் செல்வதற்கு
ஜோகூர் மாநில கால்நடை இலாகவின் அனுமதியை பெறாததால்
இவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
நால்வரும்
தலா 1,00 வெள்ளி அபராதத்தை செலுத்துவதோடு நிக் நோரிலாம் 716.04 வெள்ளியையும் ஃபைசால், ஃபவுசி ஆகியோர் 109.51 வெள்ளியையும் கூடுதல் அபராதம் விதித்ததோடு
உயிரற்ற கோழிகளை எடுத்துச் சென்ற முகமட் ஸூலில்மி எவ்வித கூடுதல் அபராதமும் விதிக்காமல்
மாஜிஸ்திரேட் நுராசிடா ரஹ்மான் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment