நாட்டின்
தேசிய விமான நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் (மாஸ்) நிறுவனத்தை வாங்குவதற்கு பல உள்ளூர்,
வெளியூர் நிறுவனங்கள் ஆர்வம் கொண்டுள்ளன என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மது
கூறினார்.
மாஸ் நிறுவனத்தை
வாங்குவதற்கு பல தரப்பினர் முன்வந்துள்ள நிலையில் அதனை நாம் ஒதுக்கிட முடியாது (விற்பனைக்கு).
எத்தகைய தரப்பினராக இருந்தாலும் அதனை விற்கலாமா? வேண்டாமா? என்பது முதலில் ஆராயப்படும்.
மாஸ் இன்னமும்
நட்டத்தில் தான் உள்ளது. அதற்கு சிறந்த வழி அதனை விற்பனை செய்வதே ஆகும் என்று அவர்
சொன்னார்.
No comments:
Post a Comment