பெட்டாலிங் ஜெயா-
இந்து சமயத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவேற்றிருந்த பேஸ்புக் பயனர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
“Zamri Bin Abd Razak” எனும் இந்த பேஸ்புக் அகப்பக்கத்தின் உரிமையாளர் இந்து சமயத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவேற்றம் செய்ததால் இன்று கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
1998 தகவல் தொடர்பு, பல்லூடக சட்டம் செக்ஷன் 23இன் கீழ் விசாரணைக்கு உதவும் பொருட்டு 52 வயதான அந்த ஆடவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று போலீஸ் படைத் தலைவர் முகமட் புஸி ஹருண் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் சமயம் சார்ந்த உணர்வை தூண்டக்கூடிய கருத்துகளை பதிவேற்றம் செய்யவோ, பகிரவோ வேண்டாம் என்று அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment