நேற்று வெளியான
எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகளில் காஜாங் , சுல்தான்
அப்துல் அஸிஸ் ஷா இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் சத்தியசீலன் சிவசுந்தரம் 3.5 விழுக்காடு
மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
காஜாங் தமிழ்ப்பள்ளியில்
தமது தொடக்கக் கல்வியை பயின்ற இவர், செராஸ் ஜெயா இடைநிலைப்பள்ளியில் தமது கல்வியை தொடர்ந்தார்.
தொடர்ந்து
தாம் உயர்கல்வி பயிலவிருப்பதாகவும் ஒரு பட்டதாரி ஆசியராக உருவெடுக்க வேண்டும் என்பதே
தமது எதிர்கால ஆசை எனவும் சத்தியசீலன் கூறினார்.
தமது இந்த
சாதனைக்கு துணையாக இருந்த பெற்றோர் சிவசுந்தரம் – பவாணி, ஆசிரியர்கள் ஆகியோருக்கு நன்றி
தெரிவித்துக் கொண்டார்.
இதனிடையே,
எஸ்டிபிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற சத்தியசீலன் வாழ்வில் இன்னும் பல சாதனைகள்
படைக்க வேண்டும் என்று ஷா ஆலமைச் சேர்ந்த தாத்தா
சாமிநாதன் – பாட்டி கலைவாணி ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment