Monday, 11 February 2019

மயக்க நிலையில் இருந்தேன்; வெளியில் நடந்தது தெரியாது - அஸ்மின் அலி

கோலாலம்பூர்- சீனப் பெருநாளுக்குப் பின்னர் தாம் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவதாக வெளிவந்த தகவல் தமக்கு தெரியாது என்றும் அப்போது தாம் மயக்க நிலையில் இருந்தாகவும் பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார். கடந்த வாரம் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டபோது நான் மயக்க நிலையில் இருந்தேன். அப்போது வெளியான இந்த தகவல் தொடர்பில் வெளியில் என்ன நடந்து என்பது தமக்கு தெரியாது. தாம் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவதாக வெளிவந்த தகவலை மறுத்த அஸ்மின் அலி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மட்டுமே தமது கவனம் செலுத்துகிறேன் என்று அவர் சொன்னார்.

No comments:

Post a Comment