கோலாலம்பூர்-
தீயணைப்பு வீரர முகமட் அடிப் மரண விசாரணை தொடர்பில் சீபில்ட் ஆலயத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை விசாரணை நீதிபதி இன்று நேரில் பார்வையிட்டார்.
கடந்தாண்டு நவம்பர் 27இல் நிகழ்ந்த இந்த மோதலில் தீயணைப்பு வீரர் முகமட் அடிப் தாக்கப்பட்டதில் கடுமையான காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முகமட் அடிப்பின் மரண விசாரணை நேற்று தொடங்கிய நிலையில் முகமட் அடிப் தாக்கப்பட்ட ஆலய வளாகத்தையும் தீயணைப்பு வாகனங்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையும் நீதிபதி ரோப்பியா முகமட் நேரில் பார்வையிட்டார்.
No comments:
Post a Comment