கோலாலம்பூர்-
அரச மலேசிய போலீஸ் படையின் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு புதியவர்களை நியமனம் செய்வது குறித்து உள்துறை அமைச்சு ஆலோசித்து வருவதாக அமைச்சர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பை வலுபெறச் செய்யும் வகையில் இவ்விரு பதவிகளுக்கான புதிய நியமனம் குறித்து பிரதமர் துன் டாக்டர் மகாதீருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.
கூடிய விரைவில் இப்பதவிகளுக்கு புதியவர்கள் நியமனம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்.
ஐஜிபி, துணை ஐஜிபி ஆகிய பதவிகளுக்கு தகுதியான சிலரது பெயர்களை உள்துறை அமைச்சு ஆராய்ந்து வருகிறது என முஹிடின் யாசின் கூறினார்.
No comments:
Post a Comment