Monday, 11 February 2019
பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மீது 'போலி சான்றிதழ்' குற்றச்சாட்டுகள்
கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பல தலைவர்கள் மீது 'போலி சான்றிதழ்' குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கத்தின் பதவியில் அமர்த்தப்பட்டுள்ள பல தலைவர்கள் போலி சான்றிதழை வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு பூதாகரமாக வெடித்து வருகிறது.
ஒரு துணை அமைச்சர் உட்பட பல தலைவர்கள் மீது இந்த குற்றச்சாட்டுகளை அம்னோ உட்பட இதர கட்சிகள் முன்வைக்கின்ற நிலையில் ஆளும் பக்காத்தான் ஹரப்பானுக்கு இது தலைவலியாக மாறியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை சில தலைவர்கள் மறுத்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தை பூதாகரமாக்க முயற்சித்து வருகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment