கடந்த 14ஆவது
பொதுத் தேர்தலின்போது மக்களின் மனமாற்றத்தால் ஆட்சி அமைத்த நம்பிக்கை கூட்டணி (பக்காத்தான்
ஹராப்பான்) தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற 10 மாதங்கள் போதுமா? என்று சிலாங்கூர்
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கேள்வி எழுப்பினார்.
சிலாங்கூர்
மாநிலத்தை தேசிய முன்னணியிடமிருந்து கைப்பற்றிய நம்பிக்கை கூட்டணி (மக்கள் கூட்டணி)
கடந்த 10 ஆண்டுகளாக இங்கு சிறப்பான சேவையை வழங்கியதன் காரணமாகவே நடந்து முடிந்த தேர்தலில்
சிலாங்கூரில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடிந்தது.
தற்போது மத்திய
அரசாங்கத்தை கைப்பற்றியுள்ள நம்பிக்கைக் கூட்டணி தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற
9 மாத கால அவகாசம் போதாது. கடந்த தேமு ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளதோடு
நாடும் மிகப் பெரிய கடன் சுமையை எதிர்கொண்டுள்ளது.
நாட்டின்
கடன் சுமையை தீர்ப்பதற்கு நம்பிக்கை கூட்டணி
தீவிரமாக களம் கண்டு வரும் வேளையில் தேர்தல் வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றபடும்.
ஆனால் அதற்கு சில கால அவகாசம் தேவைபடுடலாம்.
இன பாகுபாடற்ற ஆட்சி முறையை வழங்கி வரும் நம்பிக்கைக் கூட்டணிக்கு
மக்களின் ஆதரவு தொடரப்பட வேண்டும் எனவும் செமினி இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி
வேட்பாளருக்கே மக்கள் வாக்களிப்பர் என எதிர்பார்ப்பதாகவும் சிப்பாங் பண்டார் பாரு சாலாக் திங்கியில் உள்ள கலாச்சார சதுக்கத்தில்
நடைபெற்ற தமிழர் திருநாள் நிகழ்வில் உரையாற்றுகையில் கணபதிராவ் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில்
பாரம்பரிய விளையாட்டுகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், தோரணம் பின்னுதக், கோலம்
இடுதல், உறியடி போன்ற பல்வேறு போட்டி விளையாட்டுகள் நடைபெற்றன.
No comments:
Post a Comment