Wednesday, 20 February 2019

பி40 இளையோருக்கு வெ.100- நிதியமைச்சர்

கோலாலம்பூர்-
குறைந்த வருமானம் பெறும் தனிநபர்களின் சுமையை குறைத்திடும் வகையில்  இளையோருக்கு வாழ்க்கை செலவீன தொகை (பிஎஸ்எச்)  100 வெள்ளி மார்ச் மாதம் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

இளையோர் எதிர்நோக்கும் வாழ்க்கைச் செலவீனங்களை எதிர்கொள்ள பிஎஸ்எச் திட்டம் இளைஞர்களுக்கும் தொடர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இக்கோரிக்கையை ஏற்ற நிதியமைச்சர், அரசாங்கம் இளைஞர்களின் பொருளாதார நெருக்கடியை உணர்ந்திருப்பதாகவும் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த பிஎஸ்எச் திட்டத்தை  அம்கீகரித்துள்ளது.

பிஎஸ்எச் திட்டத்தில் பதிந்து கொண்டுள்ள பி40 பிரிவைச் சேர்ந்த 3 மில்லியன் இளையோரின் வங்கி கணக்கில் மார்ச் மாத இறுதியில் நேரடியாக இந்த நிதி சேர்க்கப்படும் எனவும் இத்திட்டத்திற்காக 300 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

No comments:

Post a Comment