கோலாலம்பூர்-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் நான் வேட்பாளராக களமிறங்கினால் அங்கு மஇகா போட்டியிடுவதற்கு தேசிய முன்னணி வாய்ப்பளிக்காது என்று மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.
கடந்த 14ஆவது பொதுத் தேர்தலின்போதே கேமரன் மலையில் வேட்பாளராக களமிறங்க முயற்சித்தேன். அதற்காக நான்காண்டுகளாக கேமரன் மலையில்
கடுமையான உழைப்பையும் கொட்டினேன்.
ஆனால் தேசிய முன்னணி எனக்கு அங்கு வாய்ப்பளிக்காமல் மஇகாவின் பாரம்பரியத் தொகுதி என கூறி மஇகா வேட்பாளரை களமிறக்கியது.
நான்காண்டுகள் நான் போட்ட கடுமையான உழைப்பின் காரணமாக எனக்கு அங்கு இன்னமும் ஆதரவு இருக்கின்றது என்ற நிலையில் வேட்பாளராக களமிறங்க முடிவெடுத்துள்ளேன்.
நான் அங்கு வேட்பாளராக களமிறங்க முடிவெடுத்துள்ளதால் நிச்சயம் அங்கு மஇகா வேட்பாளரை களமிறக்க தேசிய முன்னணி முனையாது. நிச்சயம் அத்தொகுதியில் போட்டியிட அம்னோ கோரிக்கை விடுக்கலாம் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது டான்ஶ்ரீ எம்.கேவியஸ் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment