அரசாங்க குத்தகைகள் பெர்சத்து கட்சியின் தொகுதி, கிளைத் தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அக்கட்சியின் உதவித் தலைவர் டான்ஶ்ரீ அப்துல் ரஷீட் அப்துல் ரஹ்மான் விடுத்திருக்கும் கோரிக்கையை பேரா ஜசெக (DAP) நிராகரித்துள்ளது.
இத்தகைய கொள்கை முந்தைய அரசாங்கமான தேமுவைச் சார்ந்தது. அதனை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் நுழைய விடக்கூடாது.
பக்காத்தான் ஹராப்பானை மக்கள் வெற்றி பெறச் செய்ததே தூய்மையான அரசாங்கம் வேண்டும் என்பதால்தான். இது பக்காத்தான் ஹராப்பானின் கொள்கையும் அல்ல.
அரசாங்க குத்தகைகள் பெற விரும்புவோர் அதற்கு முறையாக விண்ணப்பித்து பொது டெண்டர் முறையின் கீழ் குத்தகைகளை பெற்றுக் கொள்ளலாம். அதை விடுத்து தொகுதித் தலைவர்கள் என்பதால் குத்தகைகள் வழங்கப்படக்கூடாது என்று பேரா ஜசெகவின் தலைவர் ஙா கோர் மிங் கூறினார்.
No comments:
Post a Comment