நாட்டின் மாமன்னர் சுல்தான் முகமட் வி குறித்து பகிரப்படும் பொய்யான தகவல் குறித்து சட்டத்துறைத் தலைவர் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிளந்தான் துணை மந்திரி பெசார் டத்தோ முகமட் அமர் நிக் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.
மாமன்னர் பதவியிலிருந்து சுல்தான் முகமட் வி விலகிக் கொண்டதாக சமூக ஊடகங்களில் வெளியான பொய்யான தகவல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment