உணவகத்தில் புகை பிடிக்கக்கூடாது என கூறிய பணியாளரை ஆடவர் ஒருவர் அறைந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜனவரி 1ஆம் தேதி முதல் நாடு தழுவிய நிலையில் உள்ள உணவகங்கள், பொது இடங்களில் சிகரெட் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி ஷா ஆலம், செக்ஷன் 25இல் உள்ள உணவகம் ஒன்றில் மூன்று ஆடவர்கள் புகைத்து கொண்டிருந்த வேளையில் புகைக்க வேண்டாம் என கூறியதால் வாக்குவாதம் மூண்டது.
அப்போது ஓர் ஆடவர் அந்த பணியாளரை அறைந்துள்ளார் என்று மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் பஹாருடின் மாட் தாய்ப் கூறினார்.
இச்சம்பவத்தின்போது உணவகத்தில் இதர இரு பணியாளர்களும் ஐந்து வாடிக்கையாளர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் உணவக பணியாளர் காயமடையவில்லை. இதில் சம்பந்தப்பட்ட ஆடவர் தாமாகவே முன்வந்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் விளக்கமளிக்குவாறு பஹாருடின் கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment