கோலாலம்பூர்-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தாம் வேட்பாளராக களமிறங்குவதற்கு மைபிபிபி கட்சி உச்சமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.
ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கவுள்ள சூழலில் எந்த சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறோம் என்பது வேட்புமனுவின்போது தெரிய வரும்.
கடந்த 4 ஆண்டுகளாக கேமரன் மலை தொகுதியில் சேவையாற்றியுள்ளதன் அடிப்படையில் தனக்கான வெற்றி வாய்ப்பு ஓரளவு காணப்படுவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது டான்ஸ்ரீ கேவியஸ் கூறினார்.
மைபிபிபி வரலாற்றில் முதன் முறையாக எந்தவொரு கட்சியின் நெருக்கடியும் இன்றி தன்னிச்சையான முறையில் போட்டியிடுவதற்கு முடிவெடுத்துள்ளோம் என்று இன்று நடைபெற்ற உச்சமன்றக் கூட்டத்திற்கு பின்னர் அவர் இவ்வாறு சொன்னார்.
No comments:
Post a Comment