ஜோர்ஜ்டவுன் -
தைப்பூச விழாவின்போது பினாங்கு கோவில் வீட்டிலிருந்து புறப்படும் இரதத்தை காளை மாடுகளை பூட்டி இழுப்பதற்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தடை விதித்துள்ளது.
மாடுகளை பூட்டி இரதத்தை இழுப்பதற்கு பதிலாக பக்தர்களே அந்த இரதத்தை இழுக்கலாம் என்று அதன் தலைவரும் பினாங்கு துணை முதலமைச்சருமான பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்தார்.
128 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோவிலிருந்து புறப்படும் இரதத்தை 7
கிலோ மீட்டர் தூரம் காளைகள் இழுத்துச் செல்வது அதனை வதைப்படுத்துவதாக விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆதலால், இரதத்தை பக்தர்களே இழுக்கலாம் எனவும் காளைகளை பூட்டி இரதத்தை இழுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அது சட்டப்படி குற்றமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment