Thursday, 3 January 2019

'சட்டத்தை மதிக்கிறோம்; ஆனா சிகரெட்ட விட முடியாது போஸ்'.. வைரலாகும் மலேசியர்களின் குறும்புத்தனம் (வீடியோ இணைப்பு)

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
மலேசியாவில் ஆரோக்கியத்தை பேணும் வகையில் 2019ஆம் ஆண்டு தொடக்கம் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள், பூங்காக்கள் உட்பட பல இடங்களில் புகை பிடிப்பதற்கான தடை நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில் சட்டத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் சிலர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நகைப்புக்குரியதாக மாறியுள்ளது.

உணவகங்களில் சிகரெட் புகைக்கக்கூடாது என்பதற்காக முதியவர் ஒருவர் கடையிலிருந்து 3 மீட்டர் தூரம் விலகி தனிமையில் டீ குடித்துக் கொண்டே சிகரெட் புகைக்கும் படம் சமூக ஊடகங்களில் வைரலானது.

'3 மீட்டர் தூரம் என்பதை இதைபோல் அளவெடுத்து பின்னர் புகைக்கலாம்' என்று அவ்வாடவர் கூறுகிறார்.

அதே போன்று ஓர் உணவகத்தில் அளவிடும் மீட்டரை பயன்படுத்தி 3 மீட்டர் தூரத்தற்கு அப்பால் புகைபிடிக்கும் நபர் ஒருவரின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டாலும் பலர் அதனை பின்பற்றாமல் புகைக்கும் வேளையில் சிலர் சட்டத்தை மதித்து செயல்படும் இதுபோன்று நடவடிக்கைகள்  நகைப்புக்குரியதாக அமைகின்றன.

'சட்டத்த நாங்க மதிக்கிறோம். ஆனா.. அதற்காக எல்லாம் சிகரெட் பிடிக்கிறத விடமுடியாது' என்பதுபோல் இவர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

வீடியோ இணைப்பு:


No comments:

Post a Comment