உணவகங்களில் சிகரெட் புகைப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி புகை பிடிக்கும் நபர்களுக்கு முதற்கட்ட அபராதத் தொகையாக வெ.500 விதிக்கப்படும் என்று சுகாதார துணை அமைச்சர் டாக்ரட் லீ புன் சாய் தெரிவித்தார்.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் தலைகனத்துடன் நடந்து கொள்ளும் புகைப்படிப்பவர்களுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சுகாதாரத் துறை அமலாக்க அதிகாரிகளால் முதல் முறையாக அபராதம் விதிக்கப்படும் நபர்கள் இரண்டு வாரங்களுக்குள் அபராத் தொகையை செலுத்த வேண்டும்.
அபராதத்தை செலுத்தத் தவறினாலும் மீண்டும் அதே தவற்றை செய்தாலும் 10 ஆயிரம் வெள்ளி வரைக்குமான அபராதமும் ஈராண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம் என்று அவர் சொன்னார்.
ஜனவரி 1ஆம் தேதி முதல் உணவகம் மட்டுமல்லாது பொது இடங்களில் சிகரெட் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment