சுபாங் ஜெயா, யுஎஸ்ஜே 25, ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய இடமாற்ற விவகாரத்தில் சிலாங்கூர் மாநில அரசு நடுநிலையாளராக மட்டுமே செயல்படுகிறது என்று மாநில மந்திரி பெசார் அமிருடின் சாரி தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் மனநிறைவு கொள்ளும் வகையில் சிறந்த தீர்வு அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.
இவ்வாலய இடமாற்றம் தொடர்பில் எந்த தரப்பும் தங்களின் கருத்துகளை தெரிவிக்க முன்வரலாம். ஆயினும் இவ்விவகாரம் தொடர்பில் நேற்றும் இன்றும் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் ஒரு சுமூகமான தீர்வு கிடைக்கப் பெறும் என்பதால் சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுமை காக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
சட்டவிதிகளின்படியே இவ்விவகாரத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதால் அதற்கு அனைத்துத் தரப்பினம் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment