Tuesday, 1 January 2019

உணவகங்களில் புகை பிடிப்பதற்கு தடை; நள்ளிரவு முதல் அமலாக்கம்

கோலாலம்பூர்-
2019 புத்தாண்டு கொண்டாட்டத்தில் திளைத்திருக்கும் மலேசியர்களுக்கு இன்று நள்ளிரவு தொடக்கம் உணவகங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புகை பிடிக்கும் மலேசியர்களின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் முயற்சியாக இந்த தடை அமல்படுத்தப்படுகிறது.

திருத்தம் செய்யப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டு புகையிலை கட்டுபாட்டுச் சட்டத்தின் கீழ் இத்தடை அமல்படுத்தப்படுகிறது.

நாட்டிலுள்ள உணவகங்கள் அனைத்திலும் பின்பற்றப்படும் இந்த தடையை மலேசியர்கள் அனைவரும் ஏற்கிறார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment